Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைத்துப்பாக்கியுடன் 1990 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி என்று பொறிக்கப்பட்ட அநாமதேய சுவரொட்டி ஒன்று பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
இச்சுவரொட்டி இன்று ஒட்டப்பட்டுள்ளதுடன் கருப்பு ஆகஸ்ட் 11 என்ற தொனியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது
1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பகுதியில் விடுதலை புலிகளால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட எமது நண்பர்களையும் உறவினர்களையும் நினைவு கூறுகின்றோம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை புலிகளுக்கு ஆதரவான அனைத்து நியாயங்களையும் கண்டிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை ஞாயப்படுத்துவதற்கு கனேடிய அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் .அனைவரும் பாராபட்சம் இன்றி இருங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் அக்கரப்பற்று , அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், ஒலுவில் ,சம்மாந்துறை , சாய்ந்தமருது ,கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ,உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறு சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. R
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago