2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிள்ளையானுக்காக கொலைகளை நடாத்திய சகா காத்தான்குடியில் கைது

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கனகராசா சரவணன்

பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான  முகமட் ஷாகித் என்பவரை மட்டக்களப்பு காத்தான்குடியில் அவரது வீட்டில் வைத்து இன்று மாலை சிஜடி யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்  கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையானை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் (சிஜடி) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து  கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் விசாரணையையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து பிள்ளையானுடன் செயற்பட்ட 45 வயதுடைய முகமட் ஷாகித்தை  இன்று புதன்கிழமை மாலையில் அவரது வீட்டில் வைத்து கொழும்பில் இருந்து சென்ற சிஜடியினர் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்

இதேவேளை கைது செய்யப்பட்வர் கடந்த 2024- ஜூன் 17ஆம் திகதி காத்தான்குடி மீன்பிடி இலாகாவீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெணிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையடிப்பதற்காக கை துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து அவரை பொலிசார் கைது செய்து 3 நாள்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்த நிலையில் அவரிடமிருந்து அந்த கைதுப்பாக்கியை மீட்கமுடியாத நிலையில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியவில் வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்துடன் பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .