2025 மே 19, திங்கட்கிழமை

பள்ளிவாசலில் உண்டியல் திருட்டு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய காத்தான்குடி, கடற்கரை வீதியிலுள்ள புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலொன்று திருடப்பட்டுள்ளதென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (21) அதிகாலை, சுபஹ் தொழுகைக்கு சென்ற போது, அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலைக் காணவில்லை.

இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகம், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக, பள்ளிவாசலின் தலைவர் கே.எல்.எம்.பரீட் தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கூட்டு சக்காத் நிதியமான பைத்துஸ் ஸக்காத் நிதியத்தால் ஸக்காத் பெறுவதற்காக, இந்த உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார், விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X