Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் எற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனினால் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி பிரதேசங்களைப் பார்வையிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரனின் வேண்டுகோளுக்கிணங்க, தன்னாமுனை, சிவபுரம் இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.
அத்துடன், மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பிலான ஏற்பாடுகளுக்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதேச இடைத்தங்கல் முகாம்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள மக்களுக்கும் போர்வைகள், பாய்கள் போன்றவற்றை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago