2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாலிகா வித்தியாலயத்தில் ஆண் மாணவர்களுக்கும் அனுமதி

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் ஆண் மாணவர்களையும் அனுமதிக்கச் செய்யுமாறு, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.இஸ்ஸதீன் உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் ஆண் மாணவர்களை அனுமதிக்க கோரி, கடந்த வியாழக்கிழமையன்று, மாணவர்களுடன் வீதிக்கு இறங்கி பெற்றோர்கள் ​ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து, அப்பாடசாலையின் அதிபர் யூனுஸுடன் தொடர்புகொண்டு, இந்த உத்தரவை பணிப்பாளர் வழங்கியுள்ளார்.

“காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எசி.எம்.பதுர்தீளை, எனது  சார்பில் அப்பாடசாலைக்கு அனுப்பி, இந்த வித்தியாலயத்தில் ஆண் மாணவர்களை அனுமதிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்” என மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

“ஆரம்ப பாடசாலைகளில் ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடின்றி மாணவர்கள் அனுமதிக்கப்படல் வேண்டும். இப்பாடசாலையில் மேலதிகமாக மற்றுமொரு வகுப்பை ஏற்படுத்தி அதில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிக்க செய்யுமாறு அதிபரிடம் கேட்டுள்ளேன்” எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X