Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2018 ஜூலை 22 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்துக்குட்பட்ட பழுகாமம் கிராமத்தில் அண்மையில் மின்சார ஒழுக்குக் காணமாகத் தீப்பற்றி முற்றாக எரிந்த வீட்டுக்கு போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி, பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இன்று (22) நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது, வீட்டில் இருந்த அனைத்து உடமைகளும் மின்சார ஒழுக்கினால் முற்றாகத் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளதுடன், வீடும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இதில் இருந்தவர்கள் எதுவித ஆபத்துகளுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
அக்குடும்பத்தின் நிலைமையைக் கருத்தில்கொண்டு, மேற்படி பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒரு தொகை நிதியுதவியை வழங்கி வைத்ததுடன், மேற்கொண்டு ஏனைய உதவிகளையும் மேற்கொள்ள மதிப்பீடுகளை மேற்கொள்வதாக போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago