2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பிரேதங்களை எடுத்துச் செல்ல இலவச, துரித நடவடிக்கை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரேதங்களை வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்கு இலவசமாக வாகனத்தில் எடுத்துச் செல்லும் நடவடிக்கை, அறக்கட்டளை நிறுவனத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன்(ஜனா) முயற்சியாலும் அவரின் நிதியாலும்  வறிய மக்களின் நலன் கருதி, வைத்தியசாலைகளில் உயிரிழப்பவர்களின் சடலங்களை (பிரேதங்களை) வீடுகளுக்கு  இலவசமாக எடுத்துச்செல்ல 'அறக்கட்டளை பவுன்டேசன் 'என்ற பெயரில் வாகனமொன்று கொள்வனவு செய்யப்பட்டு, சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த சேவை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல வைத்தியசாலைகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் நீண்ட கால தேவையாக இருந்த இத்தேவையை பூர்த்தி செய்ய உதவிய கோவிந்தன் கருணாகரனின் இச்சேவையை, பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

இந்த சேவை தொடர்பில் 076 6060299 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு, இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X