2025 மே 01, வியாழக்கிழமை

‘பிள்ளை’க்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை, ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சூசைதாசன் முன்னிலையில் இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி உள்ளிட்ட ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் இவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடர்பான இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

எனினும், இன்றைய வழக்கு விசாரணையின் போது, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் உரிய ஆவணங்களைக் கொண்டுவராததன் காரணமாக, அரச தரப்புச் சட்டத்தரணி விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், வழக்கு, ஜனவரி 11ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .