எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வனத்தின் கணங்கள்” எனும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சி ஒன்று, எதிர்வரும் 27 ஆம் திகதி காத்தான்குடியில் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின், உதவி சுங்க அத்தியட்சகரான உவைஸ் முகைதீன் வழங்கும் வனவிலங்கு புகைப்படக் கண்காட்சியை, காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பேரவை நடத்தவுள்ளது.
இந்த புகைப்படக் கண்காட்சியில், இலங்கையின் தேசிய வனவிலங்கு சரணாலயங்களில் இவரால் எடுக்கப்பட்ட வனவிலங்கு புகைப்படங்கள் வைக்கப்படவுள்ளன.
இலங்கையில் அருகிவரும் வனவிலங்குகள் மற்றும் பறவையினங்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையிலும் புகைப்படக் கலையை, துறைசார்ந்து ஊக்குவிக்கும் வகையிலும், இந்த புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களத்தின் உதவி சுங்க அத்தியட்சகர் உவைஸ் முகைதீன் தெரிவித்தார்.
இக்கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஆரம்பமாகி, 28 மற்றும் 29 ஆம் திகதி காலை தொடக்கம் மாலை வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025