2025 மே 19, திங்கட்கிழமை

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த “உதயம்”

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜனவரி 03 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சுயதொழில் ஊக்குவிப்பு  திட்டத்தின் கீழ், உணவு உற்பத்தி மற்றும் விற்பனை  மையமொன்று, மட்டக்களப்பு, செப்பல் வீதி பொதுச் சேவைக் கழக வளாகத்தில்  நேற்று திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, “உதயம்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விற்பனை மையத்தைத் திறந்து வைத்தார்.

பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டுள்ள வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண பெண்கள் அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன், பெண்கள் சுயதொழில் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில், இந்த விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் இணைந்ததாக, தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதியுதவியுடன், 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான உணவு உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களும் தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X