Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூலை 31 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இம்முறை நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பெண்களுக்கு, பெண்களின் உரிமைகள் தேவைகளை மய்யப்படுத்திய விஞ்ஞாபனத்தை, தமது அமைப்புத் தயாரித்தக் கையளித்து வருவதாக, கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பின் அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அந்த அமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள பெண் வேட்பாளர்களிடம் கையளித்துள்ள அந்த விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தேர்தல் வாக்காளர்களில் அரைப்பங்கிற்கும் அதிகமாக உள்ள பெண்களாகிய நாம் உங்களுக்குக் கூறுவது, பெண்களதும் ஓரங்கட்டப்பட்ட மக்களதும் உரிமைகளை உறுதிப்படுத்த முதன்மைப்படுததப்பட்ட அக்கறை தேவையாகவுள்ளது.
“அந்தவகையில், கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையில் 61 சதவீதமான மக்கள் கடனாளிகளாகவே உள்ளார்கள். மொத்த தொழிற்றுறையில் 58 சதவீதமான் மக்கள் முறைசாரா துறையிலேயே உள்ளார்கள். கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாக 30 சதவீதமான குடும்பங்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்துள்ளனர்.
“பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் ஜுன் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பில் உள்ள ஒரு பெண்கள் அமைப்புக்கு மாத்திரம் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் 96 அறிக்கையிடப்பட்டுள்ளன. இதில் 87 சம்பவங்கள் வீட்டு வன்முறைகளாகும்.
“மேற்படி பின்னணியிலே நாம் அரசியல், அரசமைப்பு, சட்ட நடைமுறை உட்பட குடும்பம், கல்வி, சுகாதாரம் ஆகிய அனைத்துத் தளங்களிலும் பெண்கள் உரிமைகளை அனுபவிப்பதையும் அவர்களின் சமத்துவத்தையும உறுதிசெய்தல் வேண்டும“ என்பதை வலியுத்துகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
49 minute ago
2 hours ago