ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மார்ச் 27 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவு - குருமண்வெளி கிராமத்தைச் சேர்ந்த, முத்துலிங்கம் கோசலை (வயது 42) ஒரு குழந்தையின் தாயார், அவரது வீட்டின் அறையிலிருந்து நேற்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
கோவில் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான குருமண்வெளி பிள்ளையார் முத்துலிங்கம் கோசலை (வயது 42) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர், சில காலமாக கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலையில் இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago