Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஜனவரி 18 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பெண்கள் மூலமாகவும் பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்ச பயன்களைப் பெற்றுக்கொள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள பெண் பிரதிநிதிகளை ஒட்டுமொத்த வாக்குகளால் ஆதரிக்க வேண்டும்” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டொக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.
அம்பாறை, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் பெண்களுக்காக இன்று (18) இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் நிகழ்வின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“பெண்களை கெளரவப்படுத்த வேண்டும். அவர்களிடமும் சிறந்த சமூக சூழல் உருவாக வேண்டும். அவர்களிடமிருந்தும் பெண் சமூகம் அதிக பயன்களைப் பெறவேண்டும்.
“இவ்வாறான நல்ல நோக்கங்களைக் கொண்டுதான், இம்முறை உள்ளூராட்சி மன்றங்களில் பெண் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
“இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மக்கள் காங்கிரஸின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக, பெண்கள் தமது முழு அளவிலான ஆதரவுகளையும் ஒருமித்த மனதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வழங்க முன்வர வேண்டும். இதன் மூலம், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ், பெண்களின் பெரும்பாலான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .