2025 மே 19, திங்கட்கிழமை

பெண் வேட்பாளர் மீது தாக்குதல்; இளைஞர் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர், மிச்நகர் பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பிலுள்ள பொதுப் பட்டியல் வேட்பாளரான பெண்ணொருவரைத் தாக்கியதான முறைப்பாட்டின் அடிப்படையில், இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் பிரசாரத்தின் பொருட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மாற்றுக் கட்சியொன்றின் ஆதரவாளரான குறித்த இளைஞன், தன்னைத் தாக்கியதாக, முறைப்பாட்டாளரான பொதுப் பட்டியல் பெண், எறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதனடிப்படையில், விசாரணை நடத்திய பொலிஸார், நேற்று (04)  இரவு சந்தேகநபரான 20 வயதுடைய இளைஞனைக் கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான பெண் வேட்பாளர், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X