Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூலை 20 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமாவின் பெயரை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக யாரும் தவறாகப் பயன்படுத்த வேண்டாமென, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை கேட்டுள்ளது.
இது குறித்து உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையியே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“நமது பிரதேசத்தில் போட்டியிடும் அபேட்சகர்களாலும் அவர்களது ஆதரவாளர்களாலும் பல்வேறு தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இதில், காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமாவின் பெயர் அரசியல் பிரசார செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் விடயம் எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
“சகல மக்களுடைய ஜனநாயக ரீதியான வாக்குரிமையை ஜம் இய்யா மதிப்பதோடு, அபேட்சகர்களின் தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமையையும் மதிக்கிறது. எனவே, காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமாவின் பெயரை தேர்தலுக்காக யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறோம்” என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago