2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பெருமளவு மாத்திரைகளுடன் மூவர் கைது

Editorial   / 2018 ஜூலை 13 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி கடத்தி வரப்பட்ட பெருமளவு மாத்திரைகளுடன் மூவர் மட்டக்களப்பு கல்லடியில்  பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து குறித்த மாத்திரைகளை எடுத்துவரப் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும்  பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.மெண்டிசின் பணிப்புரையின்பேரில், குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொடிபண்டாரவின் தலைமையிலான, எம்.ரத்னாயக்க(60575) எம்.முஜாஹித்(8868) ஆகியோரே மேற்படி வாகனத்தை மடக்கிப் பிடித்து மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி இரண்டு இலட்சம் ரூபாய்  எனவும், கைது செய்யப்பட்ட நபர்களில் இருவர் மட்டக்களப்பையும் ஒருவர் கொழும்பையும் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை இன்று (13) மட்டக்'களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X