2025 மே 17, சனிக்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிக்கையிடல் பயிற்சிப்பட்டறை

Editorial   / 2018 ஜூன் 28 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல், கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிக்கையிடுதல், ஆவனப்படுத்துதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை, மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நேற்று முன்தினம் (26) நடைபெற்றது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில், கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புகாரி மொகமட் தலைமையில், இந்தப் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 பொலிஸ் நிலையங்களினதும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள், சிறுவர் - பெண்கள் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

குற்றம் சம்மந்தமாக அறிக்கையிடுதல், விசாரணைகளை மேற்கொள்ளுதல், நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், அறிக்கைகளை ஆவணப்படுத்துதல் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள், இப்பயிற்சியின் போது மேற்கொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .