2025 மே 20, செவ்வாய்க்கிழமை

போதை மாத்திரை வியாபார உள்ளிட்ட மூவர் கைது

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 நவம்பர் 09 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இரண்டு குற்றச் சம்பவங்களில் மூன்று சந்தேகநபர்கள், நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்து போதை மாத்திரை வியாபாரியும், வாழைச்சேனைப் பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவருமே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்னர்.

வாழைச்சேனை குற்றத் தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினரால் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ஓட்டமாவடி பிரதேசத்தில் மிக நீண்ட நாட்களாக மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வைத்தியர் ஒருவரின் மகனிடம் இருந்து 120 போதை மாத்திரைகளும் 8 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனைத் தெடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

அத்தோடு, வாழைச்சேனை பகுதியில் மீன்பிடி உபகரணக் கடையை உடைத்து திருடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டனர்.

இவை தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X