Editorial / 2021 நவம்பர் 14 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கடந்த 9ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற ஆசிரியர் தொழிற்சங்கப் போராட்டத்தின்போது சுகயீனமுற்று மரணமடைந்த தெனியாய மத்திய கல்லூரியின் ஆசிரியைக்கு, மட்டக்களப்பில் நேற்று (13) மாலை 6.30 மணியளவில், இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மரணமடைந்த ஆசிரியை ஏ. டி. வருணிகா அசங்காவின் உருவப்படத்துக்கு மலர்வைத்து, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராஜா ருபேஷன் தலைமையில், மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்பாக இந்நிகழ்வு நடைபெற்றது.
தனது உடல் சுகயீனத்தையும் பொருட்படுத்தாது, அனைத்து ஆசிரியர் அதிபர்களுக்காகவும் போராடிய வேளையில் மரணித்த ஆசிரியையின் ஆத்மா சாந்தி வேண்டி இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அன்னாரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த கவலையையும் சங்கத்தின் சார்பாக இதன்போது தெரிவித்தனர்.
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago