2025 மே 07, புதன்கிழமை

புகை விசிறுதல்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 19 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை 07ஆம் வட்டாரத்தில் டெங்கு நோயாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (17) இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய துறைநீலாவணை தெற்கில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் புகை விசிறுதல் புதன்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த டெங்கு நோயாளர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.  

துறைநீலாவணைக் கிராமம் பூரண டெங்குக் கட்டுப்பாட்டுப் கிராமமாக  பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென்பதுடன்,  டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்  வி.வேணிதரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X