Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்கு மாகாணம் உட்பட இலங்கையில்; சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜு{லை மாதம் மட்டக்களப்பு, பாசிக்குடாவில் சர்வதேச சுற்றுலா மாநாடு நடைபெறவுள்ளது.
'சமாதானமும் சுற்றுலாத்துறையும்' என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்மாநாட்டுக்கான ஏற்பாடு மற்றும் பாசிக்குடா சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல், மாவட்டச் செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இதன்போது பாசிக்குடா சுற்றுலா வலயத்தின் அபிவிருத்தி வேலையை ஜு{லை மாதத்துக்கு முன்னர் இதனுடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், உள்ளூராட்சி அமைப்புகள் நிறைவு செய்வது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டன. இந்த அபிவிருத்தி வேலையில் க சுற்றுலா விடுதிகள் அமைந்துள்ள பகுதிகளின் தரைப் பிரதேசங்களைச் சமப்படுத்துதல், விடுதிகளுக்காக உள்ளக வீதி வலையமைப்புகளை ஏற்படுத்துதல், வாகனத் தரிப்பிடக் கட்டுமானங்கள், பொதுவசதிகளைக் கொண்ட கட்டடத் தொகுதிகளை அமைத்தல், உள்ளக வடிகாலமைப்புத் தொகுதி, பொதுமக்கள் பாவனைக்காக பாலம் அமைத்தல், ஹெலிகொப்டர்கள்; இறங்குவதற்கு தளங்கள் அமைத்தல், நடைபாதைகள், ஓய்வு அறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை அடங்குகின்றன.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை இணைத்ததாக நடைபெறவுள்ள மாநாட்டில், பல நாடுகளிலுமிருந்து 100 தொடக்கம் 125 வரையான முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை கவர்வதும் சுற்றுலா வலயத்தை பிரபலப்படுத்துவதும் மேம்படுத்துவதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago