Niroshini / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
“மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் 3.5 இலட்சம் ரூபாய் செலவில் 300 வசதிகுறைந்த பேசாக்கற்ற கற்பிணித் தாய்மாருக்கு இலவச போசாக்கான பால்மா பொதிகளை விநியோகம் செய்துள்ளோம்” என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் 3.5 இலட்சம் ரூபாய் செலவில் பேசாக்கற்ற மற்றும் வசதிகுறைந்த கற்பிணித் தாய்மாருக்கு இலவச போசாக்கான பால்மா பொதிகள் வழங்கும் நிகழ்வு, இன்று சனிக்கிழமை (24) களுவாஞ்சிகுடி பொதுசுகாதார வைத்திய அலுவவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“போசாக்கான பிரஜைகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக்கருவில்தான் ஜனாதிபதியும் செயற்பட்டு வருகின்றார். எனவே, இப்பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதேச சபை என்ற ரீதியில் நாங்களும் இப்பிரதேச மக்களுக்குப் பணி செய்து வருகின்றதோடு, எமது எதிர்கால சந்ததியினரை நல்ல பிரஜைகளாக தேக ஆரோக்கியமுள்ளவர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் எமது பிரதே சபை நிதியிலிருந்து இவ்வாறான உதவிகளைச் செய்து வருகின்றோம். எனவே தாய்மார்கள் போசாக்கான குழந்தைகளைப் பெற்று நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி பொது சுகாராத வைத்திய அதிகாரி கே.கிருஸ்ணகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,
நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெற்று ஊட்டச்சத்து மிகுந்த பிள்ளைகளை வளர்த்தெடுத்தால்தான் பிள்ளைகள் ஆரோக்கியமாகத் திகழ்வார்கள். அவ்வாறெனில்தான் அவர்கள் எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளாகவும் உருவாகுவார்கள்.
ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதற்கு நாம் வழங்கும் உதவிகள் மாத்திரம் போதாது தொடர்ந்து சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். தற்போது நமது பிரதேசத்தில் கிடைக்கின்ற உணவு வகைகளை தினமும் உட்கொண்டு வந்தால் போசாக்கற்ற நிலமை ஏற்படாது.
எனவே போசாக்கின்மையைப் போகுவதற்கு எமது பிரதேசத்தில் கிடைக்கக் கூடிய முக்கியமான சத்துணவுகள் போதுமானதாகும் என அவர் தெரிவித்தார்.

4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago