2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிறு கைத்தொழில் பயிற்சி

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் மற்றும் கைம்பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சிறுகைத்தொழில் தொடர்பான உற்பத்திப் பயிற்சிகளை வழங்கி, அவர்கள் நாளொன்றுக்கு 400 ரூபாய் முதல் 500 ரூபாய்வரை வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வகையிலான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 30 வயதுக்கு மேற்பட்ட 100 பெண்களை  இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும்; அவர் கூறினார்.

ஜேர்மன் நாட்டு லிட்லேன் நிறுவனத்;தின் நிதியுதவியுடன் இந்தத்   திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஜேர்மன் நாட்டு லிட்லேன் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் காத்தான்குடியிலுள்ள பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X