2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் திடீர் மரணம்

Kogilavani   / 2017 ஜனவரி 01 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர்  பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர், புன்னைக்குடா வீதி, தளவாய் கிராமத்தைச் சேர்ந்த தயாகரன் மதுஷான் (வயது 11) என்ற சிறுவனே, இவ்வாறு நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இதுபற்றி சிறுவனின் தந்தை சிவலிங்கம் தயாகரன் (வயது 34)  தெரிவிக்கையில்,  புன்னைக்குடாவில் ஆழ்கடல் தொழிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில், மனைவியிடமிருந்து மகன் திடீரென விழுந்து மரணித்து விட்டதாக செய்தி கிடைத்தது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு மகன் கொண்டு செல்லப்பட்டபோதும் ஏற்கெனவே அவரது உயிர் பிரந்து விட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

எமது வீட்டு வளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தேவாயலத்தில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் எனது மகனும்   ஈடுபட்டிருந்துள்ளார். இதன்போதே அவர் விழுந்து உயிரிழந்துள்ளார்' என்று தெரிவித்தார்.

சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X