2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

போதைத்தடுப்புக் கல்விப் பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 11 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -கே.எல்.ரி.யுதாஜித்

அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான போதைத் தடுப்புக் கல்விப் பயிற்சிப்பட்டறை, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையானது இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் ஒளடதங்கள் கட்டுப்பாடு தடுப்பு மற்றும் புனர்வாழ்வு சேவைகள் முறை என்பவற்றின் தொழிற்பாடுகளை முன்னிலை அரச நிறுவனத்தில் மேற்கொள்கிறது.

அதன் முதற்கட்டமாக ஒளடத கட்டுப்பாட்டுக் கல்விப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம், தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்கில மற்றும் தமிழ் மொழிகளில் நடத்தியது.  

இப்பயிற்சிப்பட்டறையின்போது போதைப்பொருளின் பாதிப்பு, அதனைக் கட்டுப்படுத்துவதன் தேவை, கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

இத்திட்டமானது ஜனாதிபதியின் ஊட்டச்சத்து மேம்பாடு, போதையற்ற நாடு, உணவு உற்பத்தியில் தன்னிறைவு, சிறுநீரகப் பாதுகாப்பு உள்ளிட்ட நால்வகைத் திட்டங்களில் ஒன்றாகும். அந்த வகையில், போதைத் தடுப்பை மேற்கொள்வதன் ஆரம்ப நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

100க்கும் மேற்பட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமூக சேவை உத்தியோகஸ்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் கடமை புரியும் அரச உத்தியோகஸ்தர்கள் பங்கு கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X