2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போதைப்பாவனையை ஒழிக்கக் கோரி ஊர்வலம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிகரித்து காணப்படும் போதைவஸ்துப் பாவனையை ஒழிக்கக்  கோரி வாழைச்சேனை - பிறைந்துரைச்சேனை மக்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மாத்  தொழுகையின் பின்னர் அமைதியான ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் கே.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊர்வலம் பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்மா பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமாகி வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தை சென்றடைந்தது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தற்போது போதைவஸ்துப் பாவனை அதிகரித்து காணப்படுவதாகவும் அதனை ஒழிப்பதற்கு  பொலிஸில் தனிப்பிரிவொன்றை அமைக்குமாரும் கோரியதுடன், மகஜரையும் பொலிஸாரிடம்  பள்ளிவாசல் தலைவர் கே.பதுர்தீன் கையளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X