Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் நகரில் அமைந்துள்ள பழைய சந்தை சுமார் 19.3 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், இச்சந்தையைப் புனரமைக்கும் காலப்பகுதிவரை ஏறாவூர் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள மௌலானா சதுக்கத்தில் இச்சந்தை இயங்கும் என்பதுடன், இச்சந்தையை இடம் மாற்றும் வேலை இன்று ஆரம்பிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் ஏ.அப்துல் நாஸர் தெரிவித்தார்.
அடுத்த வருடம் மே மாதமளவில் நவீன வசதிகளுடன் கூடியதாக இச்சந்தை புனரமைக்கப்படும்.
தற்போதைய சந்தை அமைந்துள்ள காணியானது ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாசலுக்கும் ஓட்டுப்பள்ளி மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்கும் சொந்தமானதாகும்.
இச்சந்தையை நவீன சந்தையாகப் புனரமைக்கும் பொருட்டு ஏறாவூர் நகரசபை மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு இடையிலான ஒப்பந்தம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago