Gavitha / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன், எம்.எஸ்.எம். நூர்தீன்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனை எதிர்வரும் திங்கட்கிழமை (16) வரை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ், நேற்று வெள்ளிக்கிழமை (23) அனுமதியளித்துள்ளார்.
2008ஆம் ஆண்டி டிசெம்பர் 13ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், காத்தான்குடி பொலிஸார் இவரை நேற்று வெள்ளிக்கிழமை (23) கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது, அவரை மூன்று நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு, பொலிஸார் கோரியிருந்தனர்.
இதன்பின்னரே, பிரசாந்தனை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025