2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பிரதியமைச்சர் அமீர் அலி வெளிநாடு பயணம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 27 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

துருக்கி நாட்டில் நடைபெறவிருக்கும் முதலாவது சர்வதேச அல்-குத்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகக் கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்ரஸின் தவிசாளருமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நாளை திங்கட்கிழமை (28) அதிகாலை, துருக்கிக்குப் பயணிக்கவுள்ளார்.

நவம்பர் மாதம் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் துருக்கி நாட்டின் ஸ்தாம்புல் நகரில் நடைபெறவிருக்கும் முதலாவது சர்வதேச அல் -குத்ஸ் மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம் மாநாட்டிற்க்கான விசேட அழைப்பானது, இலங்கையிலுள்ள சிறுபான்மைக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்ரஸுக்குக் கிடைத்திருப்பதாகவும், அகில இலங்கை மக்கள் காங்ரஸின் தலைவரும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கு அமைவாகவும் இம்மாநாட்டுக்குத் துருக்கி செல்லவுள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X