Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு பல்கலைக்கழகக்கல்லூரிக்கும் சவூதி அரேபியா மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்துக்குமிடையிலான உயர் கற்கைநெறிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று சனிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் கைச்சாத்திடப்பட்டது.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் சவூதிஅரேபிய மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழக உயர் கற்கை பீடத்துக்கான பீடாதிபதி கலாநிதி சலாஹ் சாலிம் சயீத் பாஉஸ்ஸமான் ஆகிய இருவருக்குமிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதன்போது, சவூதி அரேபிய நாட்டுப்பிரமுகர்கள்,மட்டக்களப்பு பலக்லைக்கழகக் கல்லூரியின் பீடாதிபதி, அதன் விரிவுரையாளர்கள், காத்தான்குடி காழிநீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,
மட்டக்களப்பு பல்கலைக்கழகக்கல்லூரிக்கும் சவூதிஅரேபியா மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்துக்குமிடையிலான உயர் கற்கைநெறிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் மூலம் அல்குர் ஆன் தப்ஸீர் உயர் கற்கை நெறிகளை மட்டக்களப்பு பலக்லைக்கழக கல்லூரியிலும் கற்க கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், உலமாக்கள் தங்கள் அறிவினை விருத்தி செய்து கொள்ள முடியும்.இது உலமாக்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாகும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago