Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிராந்திய முகாமையாளராக (நடத்துதல் மற்றும் பராமரிப்பு) பொறியியலாளர் டி.ஏ. பிரகாஷ் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவி பொது முகாமையாளர் அம்பாறை அலுவலகத்தில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை, பிரதான பொறியியலாளராவும் (நிர்மாணம்) ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாந்தர நகரங்களுக்கானதும் கிராமங்களுக்கானதுமான நீர் விநியோக சுகாதார திட்டத்தின் பிரதான நீர் விநியோக குழாய் பதித்தல் மற்றும் நீர் தாங்கி நிர்மாணப் பிரிவுக்கான நிர்மாணத்துறை முகாமையாளராகவும் 2008 - 2012 வரையான காலப்பகுதியில் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான மாவட்ட பொறியியலாளராகவும் (2001-2008) கடமையாற்றியுள்ளார்.
இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் (IESL) 2015/2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு பிராந்தியத்தின் தவிசாளராகவும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவச் சங்கத்தின் தலைவராகவும் தற்போது பதவி ஏற்றுள்ள பிராந்திய முகாமையாளர் டி.ஏ. பிரகாஷ் செயற்பட்டு வருகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025