2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இம்முறை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி பதக்கம் அணிவித்து கௌரவிக்க கல்வி அபிவிருத்தி அமைப்பு நிறுவனமும் வாமி நிறுவனமும் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கான நடவடிக்கை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அபிவிருத்தி அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.மீராசாகிப் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இதற்கான விண்ணப்பப்படிவங்கள் கல்வி அபிவிருத்தி அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.மீராசாகிப்பினால் பாடசாலை அதிபர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை  கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த விண்ணப்பப்படிவங்கள் தேவைப்படும் பாடசாலைகள் 077-2381455 எனும் கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளுமாறு இணைப்பாளர் ஏ.எல்.மீராசாகிப் மேலும் தெரிவித்தார்.

குறித்த விண்ணப்பப்படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலுடன்  President  Eduction  Development  Forum  No:4   Perera  Mawatha  Meetotamulla Kolonawa  எனும் முகவரிக்கு எதிர்வரும் 20.11.2015க்கு முன்னர் பதிவுத்தபாலில் அனுப்பி வைக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X