Princiya Dixci / 2016 டிசெம்பர் 31 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளியில் தர்ம அமைப்பு ஒன்றின் காணியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணை அகற்றக்கோரி பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு பிரார்த்தனைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று சனிக்கிழமை காலை, மயிலம்பாவெளியில் மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள குறித்த பொலிஸ் காவலரணுக்கு முன்பாக அமர்ந்து இந்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
'காணியை ஒப்படைத்து மக்கள் நில திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள். தர்ம நிறுவனத்தின் காணியை ஒப்படைத்து 150 வருட பொலிஸ் தினத்தை பெருமையுடன் கொண்டாடுங்கள், எங்களை அரவணைக்கும் சுவாமி இராமதாஸ் அமைப்பின் காணியை ஒப்படையுங்கள்' போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
அமைதியான முறையில் பஜனைகளுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலம்பாவெளி பிரதேச மக்கள் கருணை இல்ல மாணவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
மையலம்பாவெளி காமாட்சி அம்மன் ஆலயத்துடன் இணைந்ததாக பிரதான வீதியுடன் இணைந்ததாகக் காணப்படும் இந்த காணியை ஒப்படைக்குமாறு கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்ததாகவும் ஏறாவூர்ப்பற்று அபிவிருத்தி குழு கூட்டத்தில் கூட இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதிலும் குறித்த காணியை வழங்குவதாக உறுதியளித்தபோதிலும் இதுவரையில் வழங்கப்படவில்லையெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தான் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுசென்று குறித்த காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக தெரிவித்ததாக இங்கு கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago