2025 மே 09, வெள்ளிக்கிழமை

பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டன

Princiya Dixci   / 2016 ஜனவரி 10 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம். அஹமட் அனாம்

கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் வர்த்தக நிலையங்களை பரிசோதிக்கும் மாதாந்த செயற்திட்டத்தின் கீழ் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) நடத்திய பரசோதனையின் போது 08 வர்த்தக நிலையங்களில் இருந்து பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பிரிவுக்குப் பொறுப்பான மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் தெரிவித்தார்.

கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள சில்லரைக்கடைகள், உணவகங்களை, சுகாதார வைத்திய பரிசோதகர்கள் பரிசோதனை செய்த போது எட்டு வர்த்த நிலையங்களில் இருந்து பாவனைக்கு உதவாததும் காலாவதியானதுமான 729 குடிபானம், கேக், பிஸ்கெட், மிக்சர் மற்றும் இனிப்பு வகை என்பன கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாக மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் தெரிவித்தார்.

பாவனைக்குதவாத பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் இப்பிரதேசத்தில் இவ்வாறான பொருட்களை வைத்திருப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X