2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மகள் மரணம்; தந்தை படுகாயம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 08 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இன்று(8) காலை 9 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

காவத்தமுனை பனிச்சையடி வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய அப்துல் கபூர் முகம்மட் கலீல் என்பவர் தனது 12 வயதுடைய மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவை பகுதியில் இருந்து வந்த பஸ் வண்டி தந்தை, மகள் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் மகள் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்த சிறுமி காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும் பாத்திமா றியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில், படுகாயமடைந்த தந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .