2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘மக்களின் மேம்பாட்டுக்காக கிழக்கில் பொருளாதார வலுவூட்டல் தேவை’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கிழக்கு மாகாண மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்காக பொருளாதார வலுவூட்டல் தேவையாகவுள்ளது” என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி நேற்று முன்தினம்  கருத்துத் தெரிவிக்கும்போது, அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்து கிழக்கு மாகாண செயற்றிட்டங்கள் பற்றித் தெரிவித்த அவர்,

“கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாகாண நிர்வாகம், அந்த மாகாண சபையின் அமைச்சர் வாரியம் என்பன அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றன.

“பிரதமரின் ஆதரவு, வழிகாட்டல் தலைமைத்துவத்தின் கீழ் ஜனாதிபதியின் வழிநடத்தல் என்பனவற்றுடன் எதிர்காலத்தில் கிழக்கு மாகாண மக்கள் வலுவூட்டப்பட்டு, அவர்களின் வாழ்வில் பொருளாதாரத்தில் சமூக அந்தஸ்தில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று நம்புகின்றோம்.

“பொருளாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சம்பந்தமான முன்மொழிவுகளின் வரைவுகள் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன.

“இதுபற்றி கலந்தாலோசிக்கப்பட்டு முதலமைச்சரின் வழி நடத்தலில் மத்திய அமைச்சர்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது. அதனுடாக சிவில் சமூகத்துக்கான சேவைகளை கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக செய்ய முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X