Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா,எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.எம்.அறூஸ்
நீண்டகாலமாக பின்தங்கிக் காணப்படும் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் அல் ஹுஸைனியா வித்தியாலயத்தின் அபிவிருத்திக்கு துரித நடவடிக்கை எடுக்கப்படுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
இவ்வித்தியாலயத்துக்கு திங்கட்கிழமை (15) விஜயம் செய்து அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்த பின்னரே அவர் இதனைக் கூறினார்.
காத்தான்குடியின் வடக்கு எல்லைக் கிராமமான மஞ்சந்தொடுவாய் ஹுஸைனியாப் பகுதியில் வாழும் மக்களின் கல்வி முன்னேற்றத்துக்காக 1980ஆம் ஆண்டு இவ்வித்தியாலயம் உருவாக்கப்பட்டதாகும்.
யுத்த சூழ்நிலை காரணமாக இவ்வித்தியாலயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் முதலாம் ஆண்டுக்கு பிள்ளைகளை பெற்றோர் இவ்வித்தியாலயத்தில் சேர்க்கவில்லை. இவ்வித்தியாலயம் ஆரம்பித்தது முதல் இற்றைவரையில் எந்தவொரு மாணவனும் 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லையென அப்துர் ரஹ்மானிடம் சுட்டிக்கட்டப்பட்டது.
இவற்றைக் கவனத்திற்கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர், இப்பாடசாலையின் கல்வி நிலையை முன்னேற்றுவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறினார்.
அந்த வகையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நிதியுதவியுடன் இவ்வித்தியாலயத்தின் வகுப்பறைகளை சீரமைத்தல், மின்சார இணைப்பை மீளப் பெற்றுக்கொடுத்தல், தரம் 03, 04, 05 இல் கற்கும் மாணவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதுடன், மாணவர்களை 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
7 hours ago
8 hours ago