2025 மே 21, புதன்கிழமை

மட்டக்களப்பில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 05 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் 1,1302க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் 45 பாடசாலைகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளனவென, பாம் பவுண்டேஷன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் அருள் சக்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“மட்டக்களப்பின் குடிநீர்த் தேவையுள்ள  பிரதேசங்களில் மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் கால்நடையாகச் சென்று அலைந்து குடிநீரைப் பெறவேண்டியுள்ளது.

“அதேவேளை, சுத்தமான குடிநீர் மிக மிக அவசியம். இதனைக் கருத்தில்கொண்டு தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் நன்மையடைந்துள்ளார்கள்.

“யூ.எஸ்.எயிட்டின் நிதி உதவியைக் கொண்டு, பாம் பவுண்டேசனுக்கூடாக 2012ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 1,1302க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நன்மைய பயக்கக் கூடியதாக நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

“இதேவேளை, மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நலன்கருதி மட்டக்களப்பின் குடிநீர்த் தேவையுள்ள  45 பாடசாலைகளைச் சேர்ந்த 18,546 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள எமது நிறுவனம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.

“அத்துடன், 40 கிணறுகள் அமைக்கப்பட்டும் மேலும் 1,600 கிணறுகள் புனரமைக்கப்பட்டும் கொடுக்கப்பட்டுள்ளன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X