பேரின்பராஜா சபேஷ் / 2018 மே 13 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை, மட்டக்களப்பு - பன்குடாவெளியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளனவென, செல்லம் குழுமத் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
தமிழினப் படுகொலை நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று காலை 9 மணிக்கு இரத்ததான நிகழ்வும் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு, உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்கான விஷேட பூஜை வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாலை 6.30 மணிக்கு, பன்குடாவெளி ஆற்றங்கரை முற்றத்தில், உணர்வுபூர்வமாக 1,000 சுடர்களை ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளனவென, அவர் கூறினார்.
முள்ளிவாய்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட உணர்வு பூர்வமான நினைவேந்தலில், கட்சி இன, மத வேறுபாடுகளின்றி, அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025