Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது அதிக வெயிலுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் அதிக வரட்சி நிலமையையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதிவுப் பற்றுப் பிரதேசத்தில் நிலவும் வரட்சிகாணமாக நீர் நிலைகள் வற்றியுள்ளதுடன், குழாய் மூலமான குடிநீர் வழங்கப்படாத கிராமப்பபுறங்களில் மக்கள் குடிநீருக்காக அதிகளவு பிரயத்தனங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 14 கிராமசேவையாளர் பிரிவுகளில் 3 வவுச்சர்கள் மூலம் தினமும் 20000 லீற்றர் குடிநீர் மக்களுக்கு வழங்கி வருவதாக போரதீவுப் பற்றுப் பிரதேச சபை நிருவாகம் தெரிவிக்கின்றது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் மே;றகொள்ளப்பட்டு வரும் இக்குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரைக்கும் மேற்கொள்ளப்படும் என பிரதேச சபை மேலும் தெரிவிக்கின்றது.
இது இவ்வாறு இருக்க தற்போது நிலவிவரும் அதிக வெப்பம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிலல் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள பெரியபோரதீவு, கோவில்போரதீவு, பொறுகாமம், வெல்லாவெளி, பழுகாமம், உள்ளிட்ட பல இடங்களிலும் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளனர்.
இந்நிலையில் வற்றிய குளங்களில் அப்பகுதி மக்கள் அத்தாங்கு, கரப்பு, வலை, போன்றவற்றைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி மீன் பிடித்து வருவதோடு, உள்ளிநாட்டு வெளிநாட்டு பறவைகளும் அக்குளங்களில், இரைதேடி வருகின்றன.
அதிக வெய்யில் காரணமாக சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதால், அப்பகுதியிலுள்ள கால்நடைகளும் குடிநீருக்காக அலைந்து திரிவதையும் அவதானிக்க முடிகின்றது.
22 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago
6 hours ago