Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு இளைஞர்களுக்கு, ஜப்பானில் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்க இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக, தேசிய தொழிற்றகைமையைப் பூர்த்திசெய்த 10,000 இளைஞர்களை, ஜப்பான் நாட்டுக்கு தொழில் வாய்ப்புக்காக அனுப்பிவைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படள்ளது.
இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஜப்பான் செல்வதற்குத் தகுதியானவர்களை அடையாளம் காணும் பொருட்டு, தகவல் திரட்டு நடவடிக்கையும் தயார்படுத்தலுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கும், ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் ஏற்பாட்டில், ஏறாவூரில் எதிர்வரும் சனிக்கிழமை (28) முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்கள் தேவைப்படின், நேரடியாக ஏறாவூர் ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
8 hours ago