2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மாநகர சபையை த.தே.கூ கைப்பற்றியது

Editorial   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

38 உறுப்பினர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான தியாகராசா சரவணபவான், மேயராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பிரதி மேயராக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கந்தசாமி சத்தியசீலன்  தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில், இன்று (05) நடைபெற்றது.

மேயரைத் தெரிவுசெய்வதற்கான தியாகராசா சரவணபவான் மற்றும் சிவலிங்கம் சோமசுந்தரம் ஆகியோருக்கிடையில் பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதன்போது, 25 வாக்கு பெற்று தியாகராசா சரவணபவான் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் 11 வாக்குகளைப் பெற்றார். இருவர், நடுநிலை வகித்தனர்.

பிரதி மேயரைத் தெரிவு செய்வதற்காக கந்தசாமி சத்தியசீலன், ஸ்ரீபன் ராஜன், தெய்வநாயகம் சிவலிங்கம் ஆகியோருக்கிடையில் போட்டி நிலவியது.

இதன்போது, நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் கந்தசாமி சத்தியசீலன் 24 வாக்குகளையும், தெய்வநாயகம் சிவலிங்கம் 11 வாக்குகளையும், ஸ்ரீபன் ராஜன் 3 வாக்குகளையும் பெற்றனர்.

மட்டக்களப்பு மாநகர சபை மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தியாகராஜா சரவணபவனின் தந்தை, அமரர் தியாகராஜாவும் மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயராக இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X