Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 28 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ்
இந்த ஆண்டு டெங்குக் காய்ச்சல் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில்09 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் 5,316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட அரச திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களுடனான டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று (27) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2017ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள், அதற்கான அரச திணைக்கள அதிகாரிகளின் செயல்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஆண்டில் அரச திணைக்கள அதிகாரிகளால் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
மேலும், தற்போது மழைகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், அதற்குத் தேவையான வளங்களின் பற்றாக்குறை, அவற்றைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதேவேளை, விசேட டெங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆளணிகளைப்பெற்றுக்கொள்வது போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .