Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 6,891 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் நேற்று (26) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட 6,891 திட்டங்களுக்காக 2,090 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தின் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் முன்மொழிவுகள் விடுக்கப்பட்டதுடன், அவை தொடர்பில் ஆராயப்பட்டன.
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் முடிவுறுத்தப்படாத நிலையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டதுடன், அவற்றை விரைவுபடுத்துமாறும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இந்த மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
அத்துடன், திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
எனினும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
36 minute ago
2 hours ago