Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில், 4200 கிலோமீற்றர் வீதி எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படவுள்ளதாக கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பதிலளிக்க முடியாத அதிகாரிகள் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு சமுகமளிக்கத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று (09) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அவர் தொடரந்து தெரிவிக்கையில்,
“நல்லாட்சி அரசாங்கத்தால் மட்டக்களப்பு மாவட்டதில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பிரதேசத்திலுள்ள அரசியல் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரம் தான் அபிவிருத்தியை வெற்றிகொள்ள முடியும்.
“உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேறு வேறு திசைகளில் பயணிக்கும் போது பாமர மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். தனக்காக உழைக்கும் உறுப்பினர்களாக இருக்காமல் இலஞ்ச ஊழழலற்ற சபைகளை உருவாக்கும் உறுப்பினர்களாக செயற்பட வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago