2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சபைகளின் செயலாளர்கள் இடமாற்றம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 நவம்பர் 13 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் உட்பட சில பிரதேச சபைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி நகர சபையின் செயலாளராக மட்டக்களப்பு மாநகர சபையின் செயலாளராக கடமையாற்றிய திருமதி எம்.ஆர்.பாத்திமா றிப்கா இடமாற்றப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி நகர சபையின் செயலாளராக கடமையாற்றிய எஸ்.எம்.ஸபி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் நகர சபையின் செயலாளராகக் கடமையாற்றிய எம்.எச்.எம்.ஹமீம் ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவி செயலாளராக கடமையாற்றிய எம்.நௌபீஸ் ஏறாவூர் நகர சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றிய ஜே.சர்வேஸ்வரன், வாகரை பிரதேச சபையின் செயலாளராகவும் வாகரை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய எஸ்.இந்திரகுமார், கல்குடா வலய அலுவலகத்துக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றிய எஸ்.எம்.சகாப்தீன், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கும்  மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றிய திணேஸ்குமார், வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் உத்தரவின் பேரில், கிழக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சின் பிரதி பிரதம செயலாளர் திருமதி ஜே.பி.முரளிதரனால், இந்த இடமாற்றக் கடிதங்களுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

குறித்த இடமாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடம்பெற்றுள்ளன.

மேற்படி, காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகளின் செயலாளர்களாக இலங்கை நிர்வாக சேவை தரத்திரலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X