2025 மே 07, புதன்கிழமை

மட்டு. அரசாங்க அதிபராக நாளை பொறுப்பேற்பு

Editorial   / 2020 ஜனவரி 26 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா, உத்தியோகபூர்வமாக நாளை (27) தனது கடமையைப் பொறுப்பேற்கின்றார்.

இலங்கையிலுள்ள 10 மாவட்டங்களுக்கு அரசாங்க அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதன் அடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா, தனது நியமனத்தை, பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சில் இருந்து வெள்ளிக்கிழமை (24) பெற்றார்.

இவர், கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தில் உதவி அரசாங்க அதிபராகவும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும் பணியாற்றுயுள்ளார்.

பின்னர், கிழக்கு மாகாண சபையில் பிரதி பிரதம செயலாளராக நிர்வாகம் மற்றும் பயிற்சியும் ஆலோசனையும் எனும் பதவிகளிலும், கிழக்கு மாகாண சபையின் பேரவை செயலாளராகவும், உயர் பதவிகளிலும் பணியாற்றுயுள்ளார்.

மட்டக்களப்பு நகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானமானி பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X