Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 29 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
பாடசாலைக்கு செல்லாத நிலையில் சுற்றித்திரியும், 20 மாணவர்கள் இன்று (29) காலை ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட- தாளங்குடா வேடர்குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கஸ்தூரி ஆராச்சியின் வழிகாட்டலில் தாளங்குடா நடமாடும் பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி ஜே.எம்.மதுசங்க தலைமைமையிலான பொலிசார் ஆரையம்பதி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து வீடு வீடாக நடத்திய தேடுதலில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு 20 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது பெற்றோரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்கு சமுகமளிக்காவிட்டால், பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, பொலிசார் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
8 minute ago
14 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
15 minute ago