Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோய் பரிசோதனையான பி.சி.ஆர் பரிசோனை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 143 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மட்டு. போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி காலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
மட்டு. பேதனா வைத்தியசாலையில் நேற்று (29) நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில், “உலகலாகிய தொற்று நோய் கொரோனா வைரஸ் என பிரகடனப்பட்ட பின் சுகாதார அமைச்சு முன் ஆயத்தங்கள் செய்துள்ளது. இதற்கமைய, கொரோனா முகாமைத்துவம் செய்யும் வைத்தியசாலையாக எமது வைத்தியசாலையும் தெரிவுசெய்யப்பட்டது.
“வைத்தியசாலையின் விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாவது மாடியில் கொரோனா தொற்று நோய் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதே கட்டடத்தின் முதலாவது தளத்தில் விசேட வைப்படுத்தும் ஒரு பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“இந்தக் கட்டட முதலாவது மாடியிலுள்ள விசேட பிரிவுக்கு வரும் நோயாளர்களில் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் பிரத்தியோக பாதையூடாக அழைத்து செல்லப்பட்டு, இரண்டாவது மாடியிலுள்ள கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், அவர்கள் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அல்லது வெலிசறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படுவார்.
“கொரோனா தொற்று நோய் பரிசோதனையான பி.சி.ஆர் உபகரணம் நிர்மானிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதன் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 143 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளோம். இதனிடையே, திங்கட்கிழமை மேற்கொண்ட பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
“இவர்களில் ஒருவர், எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர். ஏனைய மூவரும் தனிமைப்படுத்தும் முகாமில் தடுத்து வைக்கப்பட்வர்கள். அவர்கள் அனைவரும், ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
05 May 2025