2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் டெங்கினால் நான்கு மாதங்களில் ஐவர் பலி

Editorial   / 2018 மே 01 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்

டெங்குவின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம், கடந்த நான்கு மாதங்களில், 5 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக, மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

​மேலும், குரான் பிரதேச செயலகப் பிரிவில் மூன்று பேரும், ஏறாவூர் மற்றும் ஆரையம்பதியில் ஒவ்வொருவருமாக, இதுவரை ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, நேற்று டெங்கு தொற்றால் உயிரிழந்த ஆரயம்பதி​யைச் சேர்ந்த, மாணவி சபாநாதன் ஜதுர்ஸ்ரிக்கா, 2017 சாதாரண தரப்பரீட்சையில், 8 ஏ மற்றும் 1 பீ சித்தியைப் பெற்று, விஞ்ஞானப்பிரிவில் கற்று வந்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X